News December 15, 2025
மதுரை: எம்.பி கனிமொழி மீது அவதூறு… ஒருவர் கைது

திருப்பரங்குன்றத்தில் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறி திருப்பரங்குன்றம் கிராம மக்கள் சார்பாக நேற்று முன்தினம் (டிச.13) உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு வந்திருந்த திருப்பரங்குன்றத்தை சேர்ந்த கார்மேகம்(65) தூத்துக்குடி எம்பி கனிமொழி குறித்து யூடியூப் சேனலில் அவதூறாக பேசியதாக, திருப்பரங்குன்றம் போலீசார் இன்று அவரை கைது செய்தனர்.
Similar News
News December 24, 2025
சாலையை கடக்க முயன்ற முதியவர் டிப்பர் லாரி மோதி பலி

மதுரை ஆலம்பட்டி திரவியம்(77) கருமாத்தூரில் அவர் மகன் சரவணகுமார் நடத்தி வரும் திரவியம் மருத்துவமனையில் பணியாற்றி விட்டு நேற்று முன்தினம் மாலை பஸ்ஸில் ஏறி ஆலம்பட்டி பஸ் ஸ்டாண்டில் இறங்கி சாலையை கடக்க முயன்ற போது, டிப்பர் லாரி மோதியது. சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் அங்கு பலியானார். திருமங்கலத்தை சேர்ந்த லாரி டிரைவர் சுதந்திர ராஜை சமயநல்லூர் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
News December 24, 2025
மதுரை: எங்கெல்லாம் மின்தடை? ஒரு CLICK போதும்!

மதுரை மாவட்டத்தில் மின்தடைகள் பராமரிப்பு வேலைகள் அல்லது தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்படும், அவை அடிக்கடி மாறுபடும். நீங்கள் இனி செய்திகள் வழி மட்டுமே மின்தடையை முன்கூட்டி அறிய முடியும் என்பதில்லை. இந்த <
News December 24, 2025
மதுரை: சாலை விபத்தில் பெண் பரிதாப பலி.!

மதுரை – தேனி சாலையில் வாலாந்தூர் கண்மாய்கரை அருகே நடந்து சென்ற சுமார் 60வயது மதிக்கத்தக்க பெண் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே நேற்று பலியானார். இது குறித்து வாலாந்தூர் விஏஓ இந்திரஜித் போலீசில் புகார் அளித்தார். இறந்த பெண் குறித்தும், விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்தும், வழக்கு பதிவு செய்து வாலாந்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


