News December 15, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

ஈரோடு : இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிக்கு முக்கிய பாதுகாப்பு தலை கவசம் ஆகும். பொதுமக்கள் காவல்துறையினருக்கு பயந்து தலைக்கவசம் அணிய வேண்டாம் எனவும், தங்களின் பாதுகாப்புக்காக அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்புக்காக தலைக்கவசம் அணிவது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு ஹெல்மெட் லாக் அணிவது கட்டாயம் என ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

Similar News

News December 18, 2025

பூக்கள் விலை உயர்வு

image

சத்தி பூ மார்க்கெட்டில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்தது. மல்லிகை-ரூ2000-3120-க்கும், முல்லை ரூ.800-1200-க்கும், காக்கடா.ரூ.750-1250-க்கும், செண்டு மல்லி ரூ.15-60க்கும், கோழி கொண்டை.ரூ.20-85-க்கும், ஜாதிமுல்லை-ரூ.1000-1250-க்கும், கனகாம்பரம்-ரூ.600-க்கும், அரளி-ரூ.270-க்கும், சம்பங்கி-ரூ.160-க்கும், செவ்வந்தி.ரூ-140-க்கும் விற்பனையானது.

News December 18, 2025

ஈரோடு: சத்துணவு மையத்தில் வேலை

image

ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 64 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்-ரூ.3000 முதல் ரூ.9,000 ஆகும். விண்ணப்பங்களை https://erode.nic.in/ என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து ஜன.9.26-க்குள் மாநகராட்சி, நகராட்சி அலுவலங்களில் வழங்க வேண்டும். (வேலைதேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க)

News December 18, 2025

யார் இந்த காலிங்கராயன்

image

லிங்கையன் கவுண்டர் என்ற இயற்பெயர் கொண்டர். இவர் 13-ம் நூற்றாண்டில் முக்கியப் பங்காற்றினார். வீரபாண்டியனின் படைத்தளபதியாகி, தலைமை அமைச்சராக உயர்ந்தார். இவருக்கு வீரபாண்டியனால் “காலிங்கராயன்” என்ற பட்டம் வழங்கப்பட்டது. இவர் கட்டிய கால்வாயின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தின் 5-ம் தேதி “ காலிங்கராயன் தினம்” கொண்டாடப்படுகிறது.

error: Content is protected !!