News December 15, 2025

தேனி: மனைவியின் தங்கையை தாக்கிய கணவர் கைது

image

மயிலாடும்பாறை பகுதியை சேர்ந்தவர் பூமாதா. இவரது அக்கா கோமதாவின் கணவரான சுரேஷ் என்பவர் அடிக்கடி குடித்துவிட்டு அவரது மனைவியுடன் சண்டை போட்டு உள்ளார். இதுகுறித்து பூமாதா கேட்ட நிலையில் சுரேஷ் அவரை சரமாரியாக தாக்கியதுடன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷை நேற்று (டிச.14) கைது செய்தனர்.

Similar News

News December 26, 2025

தேனியில் புகையிலை பதுக்கிய பெண் கைது!

image

போடி நகா் காவல் நிலைய போலீசார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது போடி கீழத்தெரு முனியாண்டி மனைவி லட்சுமி (34), அதே பகுதியை சேர்ந்த சூா்யா நகர் நாகராஜ் (34) ஆகியோா் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போடி போலீசார் வழக்குப்பதிந்து இவா்களிடமிருந்து ரூ.10,000 மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனா்.

News December 26, 2025

தேனி: டிகிரி போதும்., கூட்டுறவு வங்கியில் ரூ.96,210 சம்பளம்!

image

தேனி மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech முடித்தவர்கள் டிச.31க்குள் தகுதியுடைய நபர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.32,020 – ரூ.96,210 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை SHARE செய்யுங்க..

News December 26, 2025

தேனி மக்களே இதான் கடைசி… கலெக்டரின் முக்கிய அறிவிப்பு.!

image

தேனி மாவட்டத்தில் SIR பணி நிறைவுபெற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்களார்கள் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், மேற்கொள்ள நாளை 27ம் தேதி, நாளை மறுநாள் 28ம் தேதி மற்றும் ஜனவரி 3,4 தேதிகளிலும் சம்பந்தபட்ட வாக்குசாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறும். தற்போது வௌியாகியுள்ள பட்டியலில் உங்க பெயர் உள்ளதா என்று <>க்ளிக்<<>> செய்து தெரிஞ்சுகோங்க.SHARE IT

error: Content is protected !!