News April 29, 2024

பறவை காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்

image

கேரளாவில் பறவை காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், பந்தலுார் அருகே சேரம்பாடி சோலாடி சோதனை சாவடியில் கால்நடை டாக்டர் நவீன் தலைமையிலான குழுவினர் கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்குள் வரும் சரக்கு வாகனங்கள் அனைத்தையும் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கின்றனர். கிராம பகுதிகளில் கோழிகள், வாத்துக்கள் வளர்ப்போர் மத்தியில் பறவை காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Similar News

News January 2, 2026

குன்னூர் ராணுவ சாலையில் போக்குவரத்து தடை

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட ராணுவ சாலையில் தற்போது தற்காலிகமாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வாகன ஓட்டிகள் மாற்று பாதையைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். சாலை சீரமைப்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருவதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 2, 2026

நீலகிரியில் கனமழையால் ரத்து!

image

நீலகிரியில் கடந்த ஒரு மாதமாக நிலவிய கடும் உறைபனி, வங்கக்கடல் வளிமண்டல சுழற்சியால் மாறி பனியின் தாக்கம் குறைந்தது. நேற்று இரவு முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே, மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குன்னூர் – ஊட்டி இடையேயான மலை ரயில் சேவை தற்போது தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News January 2, 2026

நீலகிரி: B.E, B.TECH, MBA போதும்.. ரூ.3 லட்சம் சம்பளம்

image

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு B.E, B.TECH, MBA, ME முடித்த 21 முதல் 45 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.3 லட்சம் முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், ஜன.6-ம் தேதி கடைசி நாள் ஆகும். (நல்ல சம்பளத்தில் வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க)

error: Content is protected !!