News December 15, 2025
உடுமலையில் பரபரப்பு: துரத்தி துரத்தி கொட்டிய தேனிக்கள்!

திருப்பூர் உடுமலையை கல்லாபுரம் ஊராட்சி வேல்நகரைச் சேர்ந்த கௌரி காலமானார். நேற்று மயானத்தில் அவரது உடலை அடக்கம் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக தேனீக்கள் பொதுமக்களை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அதே பகுதியைச் சேர்ந்த கர்ணன், மாரிமுத்து, சுந்தரபாண்டியன், மகுடீஸ்வரன் ஆகியோர் அதிக அளவில் பாதிக்கப்பட்டு, குமரலிங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News December 28, 2025
திருப்பூர்: 10th/ ITI முடித்தால் ரயில்வேயில் உடனடி வேலை

ரயில்வேயில் காலியாகவுள்ள 22,000 “குரூப் டி” பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th/ ITI. வயது வரம்பு: 18 – 33. தேர்வு முறை: கணினி வழி தேர்வு, உடற்தகுதி, மருத்துவ சோதனை. சம்பளம்: ரூ.18,000 முதல் வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 2026, ஜன., 21 முதல் பிப்., 20 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News December 28, 2025
திருப்பூரில் பாலியல் வழக்கில் அதிரடி கைது

திருப்பூரைச் சேர்ந்தவர் மணிகண்டன்(28). இவர் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறிய மணிகண்டன், அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
News December 28, 2025
திருப்பூர்: ஹோட்டலில் பிரச்னையா? WHAT’S APP பண்ணுங்க

திருப்பூர் மாவட்டத்தில் சாலையோர கடைகள், ஹோட்டல்களில் பஜ்ஜி, போண்டா, வடை, சிக்கன் 65 போன்ற உணவு பலகாரங்களை செய்தித்தாளில் பொதுமக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டாம். அவ்வாறு செய்தித்தாள்களில் உணவு வழங்கும் கடைகள் மீது திருப்பூர் உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் 9444042322 என்ற செல்போன் எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க)


