News December 15, 2025
புதுச்சேரி: BE போதும் அரசு வேலை ரெடி!

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45,OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, LLB
6.கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
Similar News
News December 21, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

வீட்டிலிருந்தே சமூக வலைதளங்கள் மூலமாக அதிக பணம் சம்பாதிக்கலாம் என்றும் பகுதி நேர வேலை வாய்ப்புகள் வழங்குகிறோம் என்றும் ஆசை வார்த்தைகள் கூறினால் அதனை நம்பி யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும், உங்கள் வங்கி கணக்கு சஸ்பெண்ட் செய்வதாக கூறி வாட்ஸ் ஆப் மூலமாக ஏதேனும் லிங்க், மெசேஜ் வந்தால் அதனை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.
News December 21, 2025
புதுச்சேரி: கஞ்சா விற்ற 3 பேர் அதிரடி கைது

புதுச்சேரி, மேட்டுப்பாளையம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், மேட்டுப்பாளையம் போலீசார் நடத்திய விசாரணையில், பூச்சி கார்த்திக், பெர்னாண்டஸ், சதீஷ் ஆகியோர் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
News December 21, 2025
காரைக்கால்: சொத்துவரி செலுத்த அறிவுரை

காரைக்கால் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான 2025-26-ம் நிதியாண்டுக்கான வரியை தற்போது நகராட்சி வரி வசூலிப்போர் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் நிலுவை வரிதாரர்களுக்கு வீடு வீடாக நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது சொத்துக்கான வரியை, உடனடியாக செலுத்திட வேண்டும் என நகராட்சி ஆணையம் அலுவலகம் தெரிவித்துள்ளது.


