News December 15, 2025

மதுரை: மகளிர் உரிமை தொகை வரலையா.? அரசு அறிவிப்பு

image

மதுரை மக்களே மகளிர் உரிமை தொகை ரூ.1000 வராதவங்க மேல்முறையீடுக்கு இத பண்ணுங்க.
1.இங்கு <>கிளிக் <<>>செய்து கணக்கு உருவாக்குங்க.
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
தகவல்களுக்கு, உங்கள் பகுதி வட்டாச்சியர்/கோட்டாட்சியரை அணுகவும்.
தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News December 24, 2025

மதுரையில் லிப்ட் கேட்டு டூவீலரை பறித்து சென்ற சம்பவம்

image

மதுரை, திருமங்கலம் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம்(49) கட்டட தொழிலாளி கப்பலூரில் வேலை செய்து வருகிறார். மதியம் டீ குடிக்க ரிங் ரோட்டில் உள்ள புளியங்குளத்திற்கு டூவீலரில் சென்றார். அப்போது 28 வயது நபர் லிப்ட் கேட்டு பயணித்தார். சிறிது தூரம் சென்ற பிறகு ஆறுமுகத்தை அவர் கீழே தள்ளி விட்டு டூவீலரை பறித்துக் கொண்டு தப்பி சென்றார். திருமங்கலம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 24, 2025

சாலையை கடக்க முயன்ற முதியவர் டிப்பர் லாரி மோதி பலி

image

மதுரை ஆலம்பட்டி திரவியம்(77) கருமாத்தூரில் அவர் மகன் சரவணகுமார் நடத்தி வரும் திரவியம் மருத்துவமனையில் பணியாற்றி விட்டு நேற்று முன்தினம் மாலை பஸ்ஸில் ஏறி ஆலம்பட்டி பஸ் ஸ்டாண்டில் இறங்கி சாலையை கடக்க முயன்ற போது, டிப்பர் லாரி மோதியது. சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் அங்கு பலியானார். திருமங்கலத்தை சேர்ந்த லாரி டிரைவர் சுதந்திர ராஜை சமயநல்லூர் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

News December 24, 2025

மதுரை: எங்கெல்லாம் மின்தடை? ஒரு CLICK போதும்!

image

மதுரை மாவட்டத்தில் மின்தடைகள் பராமரிப்பு வேலைகள் அல்லது தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்படும், அவை அடிக்கடி மாறுபடும். நீங்கள் இனி செய்திகள் வழி மட்டுமே மின்தடையை முன்கூட்டி அறிய முடியும் என்பதில்லை. இந்த <>LINK<<>>-ல் கிளிக் செய்து மதுரை மாவட்டத்தில் மின்தடை குறித்த செய்தியை உடனே தெரிந்து கொள்ளலாம். இன்று நரசிங்கம்பட்டி, வல்லாளப்பட்டி, திருவாதவூர், மேலவளவு துணை மின் நிலையங்களில் மின்தடை. SHARE

error: Content is protected !!