News December 15, 2025

பெரம்பலுர்: நிலம் வாங்க ரூ.5 லட்சம்!

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <>www.tahdco.com <<>>இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது திருவாரூர் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும்.

Similar News

News March 7, 2026

பெரம்பலூர்: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

image

பெரம்பலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News March 7, 2026

பெரம்பலூர்: திமுக மகளிர் அணியினர் பிரச்சாரம்

image

பெரம்பலூர் அரணாரையில் மாவட்ட திமுக மகளிர் அணி சார்பாக “வெல்லும் தமிழ்ப் பெண்கள் – ஸ்டாலினின் மகளிர் படை” என்ற பெயரில் வீடு வீடாக சென்று தமிழக அரசின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வு, பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், திமுக மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் ஏற்பாட்டில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

News March 7, 2026

பெரம்பலூர்: மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம் வருகிற மார்ச் 10-ம் தேதி காலை 11 மணிக்கு மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு தொடர்பான பிரச்சனைகளும் இங்கு விவாதிக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!