News December 15, 2025
40 தொகுதிகளில் காங்., போட்டியா?

டெல்லியில் காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கருடன் செல்வப்பெருந்தகை ஆலோசனை செய்து வருகிறார். இதன்பின், ராகுலை சந்தித்து திமுக கூட்டணியில் எத்தனை இடங்களை கேட்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கும் அவர், எந்தெந்த தொகுதிகளில் காங்., வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான லிஸ்ட்டையும் வழங்கவிருக்கிறார். 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளை காங்., குறிவைத்துள்ளதாம்.
Similar News
News March 11, 2026
மார்ச் 11: வரலாற்றில் இன்று

*1983 – பாகிஸ்தான் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக சோதித்தது. *1999 – இன்ஃபோசிஸ், இந்தியாவின் முதலாவது வணிக நிறுவனமாக நாஸ்டாக் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. *1927 – இந்திய புற்றுநோய் மருத்துவ நிபுணர் வி. சாந்தா பிறந்த தினம். *1992 – நடிகை மஞ்சிமா மோகன் பிறந்த தினம். *2013 – தமிழறிஞர் வே. தில்லைநாயகம் நினைவு தினம்.
News March 11, 2026
எத்தனை முறை PM வந்தாலும் வெற்றி திமுகவுக்கே: சுதீஷ்

ராஜ்யசபா உறுப்பினராக தேர்வான தேமுதிகவின் எல்.கே.சுதீஷ், அறிவாலயத்தில் CM ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த கூட்டணியால் தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்; இது தேமுதிகவினர் விரும்பிய கூட்டணி என்றார். அத்துடன் PM மோடி எத்தனை முறை தமிழகத்துக்கு வந்தாலும், வரும் தேர்தலில் திமுக கூட்டணிதான் அமோக வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
News March 11, 2026
எலும்புகள் வலுவாக இந்த 4 வகை உணவுகள் போதும்

*பால், மோர், வெந்தயம், எள், ராகி போன்ற கால்சியம் நிறைந்த உணவுகள் *முட்டையின் மஞ்சள் கரு, காளான் ஆகிய வைட்டமின் டி உணவுகள் *துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, பாதாம், வால்நட் போன்ற புரதம் நிறைந்தவை *வாழைப்பழம், பேரீச்சை, கடலை பருப்பு, பூசணி, சூரியகாந்தி விதை ஆகிய மெக்னீசியம், பாஸ்பரஸ் இருப்பவை. அதேநேரம், இனிப்புகள், குளிர்பானம், கூடுதல் உப்பு மற்றும் அளவுக்கதிமான காஃபின் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.


