News December 15, 2025

இந்தியாவுக்கு பஹல்காம்.. ஆஸி.,க்கு போண்டி

image

சந்தோஷத்தை தந்த சுற்றுலா தலங்களான இந்தியாவின் <<16186680>>பஹல்காமும்<<>>, ஆஸி.,-யின் சிட்னி <<18568504>>போண்டி கடற்கரையும்<<>> பயங்கரவாதத்தின் கொடூரத்தால் துயரத்தின் தடங்களாக மாறியுள்ளன. இரு இடங்களிலும் மதம் மற்றும் இனத்தை அடிப்படையாக கொண்டே தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. பஹல்காமில் 26 உயிர்களும், சிட்னியில் 15 உயிர்களும் பறிபோன நிலையில், இரண்டிலும் பயங்கரவாத அச்சுறுத்தலில் பாதிக்கப்பட்டவர்கள் அமைதியான பொதுமக்களே. So sad!

Similar News

News December 25, 2025

போக்சோ வழக்கில் கைதாகும் RCB வீரர்

image

போக்சோ வழக்கில் ஜாமின் கோரிய RCB வீரர் யஷ் தயாலின் மனுவை ஜெய்ப்பூர் போக்சோ கோர்ட் நிராகரித்துள்ளது. கிரிக்கெட்டில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி எமோஷ்னல் பிளாக்மெயில் செய்து சிறுமி ஒருவரை யஷ் தயால் பலாத்காரம் செய்ததாக புகாரளிக்கப்பட்டது. மொபைல் Chat, போட்டோக்கள், ஹோட்டலில் தங்கியதற்கான ஆதாரங்களும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டன. கைதாகும் பட்சத்தில் அவர் IPL-ல் விளையாட முடியாமல் போகலாம்.

News December 25, 2025

பட்டுப்புடவையில் தேவதையாக கீர்த்தி ஷெட்டி!

image

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான கீர்த்தி ஷெட்டிக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. Gen Z-யின் கனவு கன்னியாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டி இன்ஸ்டாவில் ரெகுலராக போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது பட்டுப்புடவையில் தேவதையாக மின்னும் அவரது போட்டோக்களை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் மேலே SWIPE பண்ணி பாருங்க…

News December 25, 2025

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹160 உயர்வு!

image

தங்கம் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹20 உயர்ந்து ₹12,820-க்கும், சவரனுக்கு ₹160 உயர்ந்து ₹1,02,560-க்கும் விற்பனையாகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹3,360 என தாறுமாறாக உயர்ந்துள்ளதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!