News December 15, 2025
தமிழகத்தில் 65 தொகுதிகளில் BJP போட்டியா?

டெல்லியில் நயினார் நாகேந்திரன், அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் பாஜக தனிப்பட்ட செல்வாக்குடன் இருக்கும் 50 தொகுதிகள், கூட்டணியுடன் வெல்ல வாய்ப்புள்ள 15 தொகுதிகள் என மொத்தம் 65 தொகுதிகளின் பட்டியலை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. பரமக்குடி, நாங்குநேரி, கோவை வடக்கு, பல்லடம், மயிலாப்பூர், தி.நகர், குமரி, நெல்லை, மதுரை வடக்கு உள்ளிட்ட தொகுதிகள் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News December 23, 2025
இரவில் உள்ளாடை அணியாமல் தூங்கலாமா?

இரவில் உள்ளாடை அணியாமல் தூங்கினால், தூக்கத்தின் தரம் மேம்படும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். உள்ளாடை இல்லையென்றால், காற்றோட்டம் கிடைப்பதால் தேவையற்ற வெப்பம், ஈரப்பதம் குறையுமாம். இதனால், தளர்வான உடைகள் (அ) உள்ளாடை அணியாமல் இருப்பது உடலை குளிர்விக்க உதவும். அதுமட்டுமின்றி, நீண்ட நேரம் தூங்கும்போது இறுக்கமான உள்ளாடைகளால் சரும எரிச்சல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
News December 23, 2025
இது தான் இந்திய – சீன இளைஞர்களுக்கான வேறுபாடு

இந்தியாவின் GEN Z இளைஞர்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு கடன்களை வாங்குவது தெரியவந்துள்ளது. நடப்பாண்டின் தொடக்கத்தில் வாங்கப்பட்ட 27% பெர்சனல் லோன்கள் பயணம், ஐபோன் உள்ளிட்ட குறுகியகால ஆடம்பர தேவைகளுக்காக வாங்கப்பட்டுள்ளதாக Investment Banker சர்தாக் அஹுஜா தெரிவித்துள்ளார். அதேசமயத்தில், சீன இளைஞர்களோ எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தங்கத்தில் முதலீடு செய்ய கடன்களை வாங்குவதாக அவர் கூறியுள்ளார்.
News December 23, 2025
₹100 கோடி பரிசு அறிவித்த சந்திரபாபு நாயுடு!

ஆந்திராவைச் சேர்ந்த யாராவது ஒருவர் குவாண்டம் அறிவியலுக்காக நோபல் பரிசு வென்றால் அவர்களுக்கு ₹100 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என அம்மாநில CM சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். அமராவதி வேலியில் இன்று Quantum Talk by CM CBN என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற சந்திரபாபு, குவாண்டம் மற்றும் அது தொடர்பான துறைகளில் நிபுணர்களை உருவாக்க ஒரு செயல் திட்டத்தைத் தயாரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.


