News December 15, 2025

விருதுநகரில் கத்தியால் குத்தியவருக்கு மாவுகட்டு

image

விருதுநகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் கார்த்திக்குமார் 42 என்பவரை அல்லம்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ்வரன், மணிகண்டன் மற்றும் மற்றொரு நபர் கத்தியால் குத்தி நகைகளை பறித்து சென்றனர். இவ்வழக்கில் செல்வத்தை கைது செய்த போலீசார் நேற்று முன்தினம் மாலை தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்யும் போது சுவரில் ஏறி தப்பியோட முயன்று கீழே விழுந்து கை, கால் முறிந்ததால் விருதுநகர் GH-ல் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.

Similar News

News December 23, 2025

சிவகாசியில் கட்டட தொழிலாளி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

image

சிவகாசி அருகே புதுப்பட்டியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 28). கட்டிட தொழிலாளியான இவருக்கும் சிவகாசி மீனம்பட்டியை சாந்திக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று மீனம்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து சென்ற அஜித்குமார் திடீரென அருகில் இருந்த வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News December 23, 2025

விருதுநகர் அருகே முதியவரை கட்டையால் அடித்து கொலை!

image

ஆலங்குளம் அருகே நரிக்குளத்தை சேர்ந்தவர் முதியவர் ராஜா(65). இவர் நரிக்குளம் விநாயகர் கோவிலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தபோது அதே ஊரை சேர்ந்த முத்துபாண்டி (43) அங்கு வந்துள்ளார். அப்போது முத்துப்பாண்டி திடீரென முதியவர் ராஜாவை மிதித்து கட்டையால் தாக்கியுள்ளார். காயமடைந்த முதியவர் ராஜாவை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். கொலை செய்த முத்துபாண்டி கைதானார்.

News December 23, 2025

விருதுநகர்: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

விருதுநகர் மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் <>இங்கே கிளிக்<<>> செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். (அ) 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!