News December 15, 2025

தேனியில் புத்தக திருவிழா கட்டுரை போட்டி

image

தேனியில் 4-ஆவது புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு, தேனி மாவட்டத்தின் தனித்துவமான சிறப்புகள் மற்றும் வரலாற்று குறிப்புகள் குறித்த 1 பக்க கட்டுரையினை சிறந்த முறையில் அனுப்பும் நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், தயார் செய்த கட்டுரையை tnibookfair2025@gmail.com என்ற மின்னஞ்சலில் டிச.18க்குள் அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Similar News

News December 26, 2025

தேனி: கரண்ட் பில் அதிகமா வருதா.? கவலைய விடுங்க!

image

தேனி மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே<> கிளிக் செய்து<<>> உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண், செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்து சுலபமாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க.

News December 26, 2025

தேனி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு தேனி மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE IT

News December 26, 2025

தேனி: கார் மோதியதில் தந்தை, மகன், மகள் படுகாயம்!

image

சில்வார்பட்டியை சேர்ந்த அழகர்சாமி என்பவர் நேற்று (டிச.25) அவரது 11 வயது மகன் மற்றும் 4 வயது மகளுடன் திண்டுக்கல்-தேனி பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது கிருஷ்ணா என்பவர் ஓட்டி வந்த கார் இவர்களது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் காயமடைந்த மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

error: Content is protected !!