News December 15, 2025

காஞ்சி:VOTER ID-ஐ சரி பார்க்கனுமா..? CLICK

image

காஞ்சிபுரம் மக்களே, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், தந்தை பெயர், வயது, பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள <>இந்த<<>> இணையதளத்தில் உங்கள் விவரங்களை நீங்களே சரிபார்த்து கொள்ளலாம். மேலும், புகார் இருந்தால் உங்கள் பகுதி ERO/BLO-க்களை தொடர்பு கொள்ளுங்கள். உடனே அனைவருக்கும் SHARE!

Similar News

News December 28, 2025

காஞ்சி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!

News December 28, 2025

காஞ்சியில் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல்வரவு மையக் கூட்ட அரங்கில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை டிசம்பர் 29 காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் குறைகளை கோரிக்கைகளாக அளித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

News December 28, 2025

காஞ்சி: சிக்கன் சாப்பிட்ட பெண் மயங்கி விழுந்து சாவு!

image

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கொள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா (40). இவர் கடந்த 25-ஆம் தேதி இரவு சிக்கன் சாப்பிட்ட நிலையில், மறுநாள் காலையில் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனடியாகத் தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!