News December 15, 2025

புதுவையில் முதல்வரிடம் விவசாயிகள் மனு

image

புதுவை முதலமைச்சர் ரங்கசாமியை விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள், நேற்று சட்டப்பேரவையில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் காரைக்கால் மாவட்டத்தில் விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் நடைபெறுவது போல புதுவை மாநிலத்திலும் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்த வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து கிராம புறத்திலும் விவசாயிகள் பயன்பாட்டிற்கு உலர் களங்களை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றனர்.

Similar News

News December 26, 2025

புதுவை: சிறுவர் சீர்திருத்தப் பள்ளி மாணவர்கள் தப்பி ஓட்டம்

image

அரியாங்குப்பம் பகுதியில் சிறுவர் சீர்திருத்தம் பள்ளி அமைந்துள்ளது. இங்கு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 3 பேர் பள்ளியின் பின்புறம் உள்ள சுவர் வழியாக எகிறி குதித்து தப்பி ஓடியுள்ளனர். விசாரணையில் தப்பியோடியவர்களில் ஒருவர் காரைக்காலைச் சேர்ந்தவர், 2 பேர் புதுவையைச் சேர்ந்தவர்கள். மேலும் இதுகுறித்த புகாரின் படி, போலீசார் நேற்று வழக்குப் பதிந்துள்ளனர்.

News December 26, 2025

புதுச்சேரி: தேர்தல் அதிகாரியின் முக்கிய அறிவிப்பு

image

“புதுச்சேரியில் வாக்காளா் சிறப்புத் தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாக்காளா் பட்டியலில் தங்களுடைய பெயா்களைச் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்துக்கான சிறப்பு முகாம்கள் வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளிலும் மற்றும் ஜன.3 மற்றும் ஜன.4 ஆகிய தேதிகளிலும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெறும்.” என்று மாவட்ட தேர்தல் அதிகாரியான குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

News December 26, 2025

புதுச்சேரி: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

புதுச்சேரியில் வாக்காளா் சிறப்புத் தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாக்காளா் பட்டியலில் தங்களுடைய பெயா்களைச் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்துக்கான சிறப்பு முகாம்கள் வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளிலும் மற்றும் (ஜன.3) மற்றும் (ஜன.4) ஆகிய தேதிகளிலும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெறும். இதனை மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் குலோத்துங்கன் இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!