News December 15, 2025
சேலம்: தொழிலாளி மர்ம உயிரிழப்பு

சேலம் குரங்கு சாவடி பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ், ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். ஓமலூர் சேர்ந்த மணி (56) என்பதும், சாலையோரம் தங்கிக் கொண்டு கிடைத்த வேலையை செய்து அதில் உயிர் வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தது தெரிந்தது.
Similar News
News December 24, 2025
வாக்காளர் அடையாள அட்டை திருத்தமா?

சேலத்தில் உள்ள 1,346 வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் வரும் டிசம்.27, 28 மற்றும் ஜன. 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதில் புதிய வாக்களர் அடையாள அட்டை, பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.மேலும் voters.eci.gov.in என்ற இணையதளம்Voter Helpline App மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.SHAREit
News December 24, 2025
சேலம் அருகே கண்டெடுக்கப்பட்ட அதிசயம்!

சேலம் மாவட்டம் வாழப்பாடி வடக்குக்காடு பகுதியில், விவசாயி சிவகுமாரின் தோட்டத்தில் இருந்த பழமையான நடுகல்லை வரலாற்று ஆர்வலர் முனைவர் பெரியார்மன்னன் ஆய்வு செய்தார். அப்போது அது 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, ஊருக்காக உயிர்நீத்த தம்பதியைப் போற்றும் ‘சதிக்கல்’ என்பது தெரியவந்தது. இதனை ஆவணப்படுத்தியவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. நம்ம ஊர் பெருமையை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 24, 2025
சேலம்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


