News December 15, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் 13,621 பேர் தேர்வு எழுதினர்

image

கல்வி கற்காத 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களைக் கொண்டு அடிப்படை எடுத்து அறிவை பயிற்றுவிப்பதற்காக மத்திய அரசால் நடத்தப்படும் புதிய பாரத எழுத்தறிவு தேர்வானது மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது. இத்திட்டத்தின் கீழ் 495 கற்போர் மையங்களில் 13 ஆயிரத்து 621 பேர் தேர்வு எழுதினர் இதில் ஆண்கள் 2715, பெண்கள் 10906 மாற்றுத் திறனாளிகள் 27 பேர் தேர்வு எழுதினர்.

Similar News

News December 26, 2025

BREAKING மயிலாடுதுறை: தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து

image

குத்தாலம் அருகே அய்யனார்குடி நாட்டாறு சட்ரஸ் அருகே பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து ஆற்றின் கரையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி ரோட்டில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்த 30 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

News December 26, 2025

மயிலாடுதுறை: நகர செயலாளர் நியமனம்

image

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக மயிலாடுதுறை நகர கழக செயலாளராக நாஞ்சில் கார்த்திக் என்பவர் இன்று மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் பரிந்துரையின் பெயரில் அதிமுக தலைமையினால் ஒருமனதாக நியமனம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார். இவர் இதற்கு முன்பு மயிலாடுதுறை மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News December 26, 2025

மயிலாடுதுறை: ரோடு சரியில்லையா? இதை பண்ணுங்க!

image

உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறதா? இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? கவலை வேண்டாம்.<> ‘நம்ம சாலை’ <<>>என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, சேதமடைந்த சாலைகள் குறித்து உங்களால் புகைப்படங்களுடன் புகார் தெரிவிக்க முடியும். மாவட்ட சாலைகள் என்றால் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதனை ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!