News December 15, 2025
இன்று முதல் அதிமுக விருப்ப மனு

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு இன்று முதல் 23-ம் தேதி வரை விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. முதல் நாளான இன்று மட்டும் பிற்பகல் 12 மணிக்கு விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம். மற்ற நாள்களில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு படிவங்களை அதிமுக அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று EPS அறிவித்துள்ளார்.
Similar News
News December 19, 2025
லெஜண்ட் பாடிபில்டர் உயிரை குடித்த மாரடைப்பு!

உலக புகழ்பெற்ற பாடிபில்டர் Wang Kun(30) திடீர் மாரடைப்பால் காலமானார். இவர் சீன பாடிபில்டிங் சாம்பியன்ஷிப்பை தொடர்ச்சியாக 8 முறை வென்றுள்ளார். கடின உடற்பயிற்சி, தீவிர டயட்டை என உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் பல பாடிபில்டர்கள் மாரடைப்பால் மரணமடைவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபரில் இந்தியாவை சேர்ந்த பாடிபில்டர் <<17961776>>வரீந்தர் சிங்<<>>கும் மாரடைப்பால் காலமானார் என்பது நினைவுகூறத்தக்கது.
News December 19, 2025
விஜய்யின் அடுத்த பிளான்!

வடக்கு, டெல்டா, மேற்கு மண்டலங்களில் கால் பதித்துள்ள விஜய் இன்னும் தென் மாவட்டங்களில் களமிறங்காமல் இருப்பது விமர்சனத்திற்கு ஆளானது. மதுரையில் மாநாடு நடத்தியதோடு நிறுத்திவிட்டார். இதனால், வரும் நாள்களில் தென் மாவட்டங்களை குறிவைத்து விஜய்யின் சுற்றுப்பயணத்தை திட்டமிட தவெக முனைப்பு காட்ட உள்ளதாம். பொங்கலுக்கு பிறகு நெல்லை (அ) தூத்துக்குடியில் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
News December 19, 2025
Fast & Furious படத்தில் ரொனால்டோ!

பிரபல கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ, ‘Fast & Furious’ படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. உலகளவில் பெரும் வெற்றி பெற்ற, ‘Fast & Furious’ படத்தின் 11-வது பாகம் தற்போது தயாராகி வருகிறது. இப்படத்தில் இணைந்துள்ள ரொனால்டோ, நடிகர்கள் வின் டீசல், டுவைன் ஜான்சன் உள்ளிட்டோருடன் இருக்கும் போட்டோ வைரலாகி உள்ளது. இப்படம் ஜூனில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


