News December 15, 2025
ஆத்தூரில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக ஆத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் மது பாட்டில்களை விற்பனை செய்த ஜீவா, 60. அதே பகுதியைச் சேர்ந்த அமராவதி, 63. ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 20, 2025
சேலம் மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

சேலம் மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News December 20, 2025
JUST IN: சேலத்தில் வசமாக சிக்கிய அரசு அதிகாரி!

சேலம்: கோரிமேடு மின்வாரிய அலுவலகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றும் இளையராஜா, புதிய மின் இணைப்பு வழங்க சுகன்யா என்பவரிடம் ரூ. 8,000 லஞ்சம் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கையும் களவுமாகப் கைது செய்யப்பட்டார். இதே போல் உங்களிடம் அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், 0427-2418735 என்ற சேலம் லஞ்சம் ஒழிப்புப் போலீசார் எண்ணிற்குத் தொடர்பு கொள்ளவும். இதனை மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News December 20, 2025
சேலம்: சொந்த வீடு வேண்டுமா?

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் உடனே விண்ணப்பிக்கலாம். இதற்கு சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். (வீடு கட்ட நினைப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க)


