News December 15, 2025

மதுரை அருகே திமுக நிகழ்ச்சியில் மூக்குடைப்பு

image

சோழவந்தான் அருகே பொம்பன்பட்டியில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்த ‘டிபன் கேரியர்’ வழங்கும் நிகழ்ச்சியில் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு வாங்க முயற்சித்ததில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தகராறில் பொம்மன்பட்டியைச் சேர்ந்த ஸ்டீபன் 42, என்பவரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 16, 2025

மதுரை: வீட்டில் மயங்கி விழுந்தவர் பரிதாப பலி

image

மதுரை தபால் தந்தி நகர் சிவகுருநாதன் 50 மனைவியுடன் கருத்து வேறுபாடு 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார். சிறுவயது முதல் இவர் நரம்பு பாதிப்புக்கு சிகிச்சை எடுக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அண்ணன் சிவா வந்த போது, வீட்டில் சிவகுருநாதன் மயங்கி கிடந்துள்ளார் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் டாக்டர்கள் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 16, 2025

மதுரை: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா!

image

மதுரை மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். மறக்காம SHARE பண்ணுங்க.

News December 16, 2025

கோரிப்பாளையம் மேம்பாலம் பணி: பிரபல சிலை அகற்றமா.?

image

மதுரையில் கோரிப்பாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிக்காக தல்லாகுளம் பகுதியில் தியாகிகள் நினைவு ஸ்தூபி, சங்கரதாஸ் சுவாமிகள் சிலை அகற்றப்பட்டுள்ளது. இதே போல் தமுக்கம் மைதானம் முன் உள்ள தமிழன்னை சிலை அகற்றப்படும் என்ற கருத்து நிலவி வருகிறது. இது குறித்து நெடுஞ்சாலை துறை மதுரை கோட்ட பொறியாளர் மோகன் காந்தி கூறியது: மேம்பாலம் பணிக்காக தமுக்கம் தமிழன்னை சிலை அகற்ற வேண்டிய அவசியமில்லை என்றார்.

error: Content is protected !!