News December 15, 2025
திருவாரூர்: மனைவியை கொல்ல முயன்ற கணவர்!

குடவாசல் கண்டியூரைச் சேர்ந்த ஆதித்யன்(28), பிரேமா(24) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால் சமீபத்தில் ஆதித்யன் வேறு ஒரு பெண்ணுடன் பழகியதை அடுத்து, ஏற்பட்ட தகராறில் ஆதித்யன் டீசலை ஊற்றி பிரேமாவை கொளுத்தி கொல்ல முயன்றுள்ளார். இதில் காயமடைந்த பிரேமாவை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதையடுத்து குத்தாலம் போலீசார் பிரேமாவின் புகாரின் அடிப்படையில் ஆதித்யனை கைது செய்தனர்.
Similar News
News December 16, 2025
திருவாரூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (டிச.16) மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News December 16, 2025
திருவாரூர்: பண இழப்பை தவிர்க இத செய்ங்க!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 16, 2025
திருவாரூர்: மாவட்ட ஆட்சியரகம் விடுத்த அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் டிசம்பர் 17 முதல் டிசம்பர் 26 வரை கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து கணினி தமிழ், ஒருங்குறி பண்பாடு, ஆட்சி மொழி சட்ட அரசாணை, மொழிபெயர்ச்சி, கலைச்சொல்லாக்கம் வரைவுகள் மற்றும் குறிப்புகள் எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் திருவாரூர் திரு.வி.க கல்லூரியில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியரகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


