News December 15, 2025
திருச்சி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

திருச்சி, கொசவம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (35), இவர் கரூர் சென்று திரும்பியுள்ளார். அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த வயலுக்குள் புகுந்தது. இதில் பயணித்த குடும்பத்தினர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதேபோல் சுள்ளிபாளையத்தை சேர்ந்த ராம சாமி (45) கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலி மீது மோதி நின்றது. இந்த விபத்துகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
Similar News
News December 27, 2025
திருச்சி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News December 27, 2025
திருச்சி: லஞ்சம் வாங்கிய போலிஸுக்கு சிறை

திருவெறும்பூர் – நவல்பட்டு சாலையில், குணசேகரன் என்பவரிடம் கடந்த 2019-ம் ஆண்டு பாய்லர் பிளாண்ட் காவல் நிலைய ஏட்டு ராமசாமி என்பவர், ‘உனக்கு அரெஸ்ட் வாரண்ட் வந்துள்ளது’ என மிரட்டி ரூ.10,000 லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை நேற்று திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் ராமசாமிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி புவியரசு தீர்ப்பளித்தார்.
News December 27, 2025
திருச்சி: பெண் குழந்தை உள்ளதா? உடனே விண்ணப்பிக்கவும்!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், 2 அல்லது 3 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்ககள் உள்ளிட்ட விவரங்களை அறிய திருச்சி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். ஷேர் பண்ணுங்க


