News December 15, 2025
திருப்பூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் 7 ஆய்வக நுட்புநர், 5 ஆலோசகர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. https://tiruppur.nic.in/notice-category/recruitment/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து, பூர்த்தியான தகவல்களை டிச.24க்குள், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், 147, பூலுவப்பட்டி பிரிவு, நெருப்பெரிச்சல் 641602 என்ற முகவரிக்கு அனுப்ப கலெக்டர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 15, 2025
திருப்பூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

திருப்பூர் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News December 15, 2025
திருப்பூர் மாவட்டத்தில் 340 மனுக்கள் பெறப்பட்டன!

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மனிஷ் தலைமையில், இன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 340 மனுக்களை அளித்துள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 15, 2025
திருப்பூரில் ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி!

திருப்பூர் 2-வது ரயில்வே கேட் பகுதியில், நேற்று மாலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். இறந்தவர் கருநீல நிற முழுக்கை சட்டையும், வெளிர் நீல நிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


