News December 15, 2025
விஜய்யுடன் SK மோதலா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

‘பராசக்தி’ படம் திட்டமிட்டதைவிட முன்னதாக ஜன.9-ம் தேதி வெளியாக உள்ளதாக ஒரு செய்தி பரவியது. அதேநாளில் ‘ஜனநாயகன்’ வெளியாவதால், சிவகார்த்திகேயன், விஜய்யுடன் நேரடியாக மோத நினைக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் படக்குழு நேற்று வெளியிட்டுள்ள போஸ்டர்களில் ஜன.14-ம் தேதியே வெளியீடு என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 22, 2026
1 லட்சம் டன் கச்சா எண்ணெய்.. சென்னை வந்த ரஷ்ய கப்பல்

ரஷ்யாவில் இருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் எற்றி வந்த கப்பல் நேற்று சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. மற்றொரு கப்பல் வரும் 24-ம் தேதி வரும் என்றும் இந்த மாத இறுதிக்குள் மேலும் 2 கப்பல்கள் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழி நடைபெறும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், நாட்டின் எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளது.
News March 22, 2026
10 மணி நேரமாக தொடர்ந்த CPM ஆலோசனை கூட்டம்

கடந்த முறையை விட (6) குறைவான தொகுதிகளை ஏற்க மறுக்கும் CPM, தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. நேற்று சென்னையிலுள்ள CPM அலுவலகத்தில் காலையில் தொடங்கிய அக்கட்சியின் மாநிலக்குழு கூட்டம் 10 மணிநேரத்தை கடந்தும் நடைபெற்றது. இது அரசியல் களத்தில் பேசுபொருளான நிலையில், திமுக கூட்டணியை விட்டு CPM <<19437900>>வெளியேறும் <<>>முடிவில் உள்ளதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.