News December 15, 2025
கில்லியின் சாதனையை முறியடிக்குமா படையப்பா?

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘படையப்பா’ திரைப்படம் தியேட்டர்களில் பட்டையை கிளப்பி வருகிறது. ‘படையப்பா’ படம் இதுவரை ₹4 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது. இதுவரை ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில், நடிகர் விஜய்யின் ‘கில்லி’ படம் அதிகபட்சமாக ₹10 கோடியை குவித்துள்ளது. அந்த சாதனையை விரைவில் ‘படையப்பா’ முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News December 26, 2025
நெப்போலியன் பொன்மொழிகள்

*முடியாது என்ற வார்த்தை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணக்கூடிய ஒன்று.
*உங்கள் எதிரி தவறு செய்யும் போது, ஒருபோதும் அதில் குறுக்கீடு செய்யாதீர்கள்.
*சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் செயலுக்கான நேரம் வரும்போது சிந்தனையை நிறுத்திவிடுங்கள்.
*இரவில் உங்கள் உடைகளை தூக்கி எறியும்போது, உங்கள் கவலைகளையும் தூக்கி எறிந்துவிடுங்கள்.
News December 26, 2025
புதின் அழிந்து போகட்டும்: ஜெலன்ஸ்கி

கிறிஸ்துமஸ் நாளான இன்று நம் அனைவருக்கும் ஒரே கனவும் வேண்டுதலும் தான் இருக்கிறது, அது புதின் அழிந்து போகட்டும் என்பதுதான் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மிகவும் காட்டமாக தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸை ஒட்டி அவர் வெளியிட்ட வீடியோவில், புதின் அழிய வேண்டும் என்பதை விட பெரிய வேண்டுதலை கடவுளிடம் கேட்கிறோம், அது உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்பது தான் என்றும் கூறியுள்ளார்.
News December 26, 2025
மதவெறியர்களின் அட்டூழியங்கள்: சீமான்

வடமாநிலங்களின் சில பகுதிகளில் கிறிஸ்துமஸ் விழாக்களில் சிலர் அத்துமீறலில் ஈடுபட்டனர். இந்நிலையில், மதவெறியர்களின் அட்டூழியங்களை ஒருநாளும் அனுமதிக்க முடியாது என்று சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் கிறிஸ்தவ, இஸ்லாமிய பெருமக்கள் மீது தொடரும் மதவெறி தாக்குதல் எல்லாம் திட்டமிடப்பட்ட இன ஒதுக்கல் கோட்பாட்டின் செயல் வடிவமே என்றும் அவர் விமர்சித்துள்ளார்.


