News December 15, 2025

CINEMA 360°: பட்டையை கிளப்பும் ‘பராசக்தி’ பாடல்

image

*விமல் நடிக்கும் ‘வடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. *சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தில் இருந்து ‘நமக்கான காலம்’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. *ரன்வீர் சிங் நடப்பில் வெளியான ‘துரந்தர்’ படம் 9 நாட்களில் உலகளவில் ₹306 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. *அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகிறது.

Similar News

News April 7, 2026

காங்., வேட்பாளருக்கு சொந்த கட்சியினரே எதிர்ப்பு

image

விளவங்கோடு தொகுதியின் காங்., வேட்பாளர் டி.டி.பிரவீனுக்கு சொந்த கட்சியை சேர்ந்தவர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். TN, கேரளாவில் வாக்குரிமை வைத்திருப்பதாக வாதிட்டு, அவரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். அதேநேரம், மேலூர் தொகுதியின் காங்., வேட்பாளர் விஸ்வநாதனுக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் போட்டி வேட்பாளர்கள் உள்ளிட்ட 8 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

News April 7, 2026

மரண தண்டனைக்கு எதிரானவன்: கமல்

image

தனிப்பட்ட முறையில் தான் மரண தண்டனைக்கு எதிரானவன் என கமல் பதிவிட்டுள்ளார். சாத்தான்குளம் வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், கொடுங்குற்றம் இழைத்தவர்கள் சலுகைகள் இன்றி ஆயுள் உள்ளவரை சிறை வைக்கப்பட வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார். மேலும், மனிதத்தன்மையற்ற காரியத்தில் ஈடுபட்டு, ஒரு பாவமும் அறியாத தங்களது குடும்பத்தாருக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்துவிட்டனரே என்று குறிப்பிட்டுள்ளார்.

News April 7, 2026

ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிறுத்தம்

image

சென்னை வில்லிவாக்கத்தில் போட்டியிடும் தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரமாண பத்திரத்தில் வருமானம், சொத்து & நிறுவனம் தொடர்பான தகவலை மறைத்ததாக திமுகவினர் புகார் தெரிவித்ததால், அவரின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழிசையின் கடும் எதிர்ப்பால், மயிலாப்பூரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மயிலை வேலுவின் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!