News December 15, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶டிசம்பர் 15, கார்த்திகை 29 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 7:30 PM – 8:30 PM▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: ஏகாதசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.

Similar News

News December 17, 2025

ஆஸ்கரில் இந்திய திரைப்படம்!

image

ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட படமான ‘ஹோம் பவுண்ட்’, சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவின் கீழ் நாமினேஷனுக்கான தகுதி பட்டியலில் (15 படங்கள்) இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. கரண் ஜோஹர் தயாரிப்பில், நீரஜ் கய்வான் இயக்கிய இந்த படத்தில், இஷான் கட்டர், ஜான்வி கபூர், விஷால் ஜேத்வா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த பட்டியலில் இருந்து, இறுதி நாமினேஷன் பட்டியல் ஜன.22-ல் அறிவிக்கப்படவுள்ளது.

News December 17, 2025

BREAKING: திமுக அதிரடி.. மாறுகிறாரா செந்தில் பாலாஜி?

image

2021 தேர்தலில் கரூரில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, இம்முறை வேறு தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு மண்டல பொறுப்பாளராக உள்ள செந்தில் பாலாஜி, கோவையில் திமுகவின் கரங்களை வலுப்படுத்த கோவை தெற்கில் போட்டியிட திட்டமிட்டுள்ளாராம். 2021-ல் கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி அள்ளியதால், அதை முறியடிப்பதற்காக திமுக இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

News December 17, 2025

IPL ஏலம்: விலை போகாத தமிழக வீரர்கள்

image

IPL மினி ஏலத்தில் தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏலப்பட்டியலில் ராஜ்குமார், துஷார் ரஹேஜா, சோனு யாதவ், இசக்கி முத்து, அம்ப்ரிஷ் உள்ளிட்ட 11 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் ஒருவரை கூட எந்த அணியும் வாங்குவதற்கு முனைப்பு காட்டவில்லை. அஸ்வின் குறிப்பிட்டிருந்த சன்னி சந்துவின் பெயர் கூட ஏலத்தில் வாசிக்கப்படவில்லை. TN வீரர்களின் ஃபார்ம், திறனில் பிரச்னையா? என்ன காரணம்

error: Content is protected !!