News December 15, 2025

கரூர் உட்கோட்டத்தில் மது விற்ற 5 பேர் கைது

image

கரூர் உட்கோட்டம் கரூர், பசுபதி பாளையம், தாந்தோணி மலை, வெள்ளியணை, வாங்கல் ஆகிய காவல் நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது. தகவல் அறிந்து சென்ற போலீசார் மது விற்ற தமிழ்செல்வன் (38), தனபால் (40), மணிகண்டன் (39), ரவிச்சந்திரன் (42), முத்து (49) ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த 105 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

Similar News

News December 22, 2025

கரூர்: லாட்டரி விற்றவருக்கு காப்பு!

image

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா கொசூர் கடை வீதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக சிந்தாமணிப்பட்டி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து திருச்சி மணப்பாறை சேர்ந்த ராஜேந்திரன் (59) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது வசம் இருந்த அனைத்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

News December 22, 2025

கரூர்: Driving தெரிந்தால் அரசு வேலை!

image

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இதற்கு கடைசி தேதி 02.01.2026 ஆகும். DRIVING தெரிந்து, அரசு வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News December 22, 2025

கரூர்: பயணிகள் கவனத்திற்கு!

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!