News April 29, 2024

தஞ்சாவூர் மாவட்ட நீதித்துறையில் வேலை!

image

தஞ்சாவூர் மாவட்ட நீதித்துறையில் 66 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Similar News

News November 28, 2025

தஞ்சை: ஒருதலை காதலிக்கு கொலை மிரட்டல்!

image

தஞ்சையை அருகே மானோஜிப்பட்டி சோழன் நகர் பகுதியை சேர்ந்த பரணி (30) என்ற கூலித் தொழிலாளி, தஞ்சையை சேர்ந்த பட்டதாரி பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார். பெண் காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த பரணி, இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று திருமணம் செய்யாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின்பேரில் வல்லம் போலீசார் வழக்குப் பதிந்து பரணியை கைது செய்தனர்.

News November 28, 2025

தஞ்சை: புயல் அவசர உதவி எண்கள்!

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், தஞ்சை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் உங்கள் பகுதியில் மழை / புயலால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மையம் 1070, மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் 1077 அழைத்தால் போதும், உடனடியாக உதவி அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க!

News November 28, 2025

தஞ்சை: ஆற்றில் சடலமாக மிதந்த உடல்!

image

கல்லணை அருகே பாதிரகுடி வெண்ணாறு நடுக்கரை திட்டில் கவிழ்ந்த நிலையில் ஒரு பிரேதம் கிடப்பதாக தோகூர் விஏஓவுக்கு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். விஏஓ கிருத்திகா இது குறித்து தோகூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் சென்று பார்வையிட்டபோது இறந்தவருக்கு 40 வயது இருக்கலாம் – அவர் யார்? என்பதும் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!