News December 15, 2025
வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதல் – பயணிகள் காயம்

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் வந்தே பாரத் ரயில் விருத்தாச்சலம் கடந்து வந்துகொண்டிருந்தபோது, சிறுவர்கள் ரயிலில் கல்லைக் கொண்டு எறிந்ததில், கண்ணாடி நொறுங்கி பயணிகள் சிலர் காயமடைந்தனர்.
இதனையடுத்து திருச்சி ரயில் நிலையம் வந்தே பாரத் ரயிலில் காயம் அடைந்த பயணிகளிடம், முதுநிலை மருத்துவ கண்காணிப்பாளர் விஜயலட்சுமி நேரில் சந்தித்து அவர்களது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
Similar News
News December 30, 2025
திருச்சியில் சிக்கிய திருட்டு கும்பல்

திருச்சி தில்லை நகர், உழவர் சந்தை, புத்தூர் ரவுண்டானா உள்பட 11-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள மின்கம்பங்களில் இருந்து 46 பேட்டரிகள் திருடப்பட்டிருப்பது மின்வாரிய அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், மின்கம்பங்களில் இருந்து பேட்டரிகளை திருடிய பீமநகரை சேர்ந்த பிரத்திவிராஜ் (29), அப்துல் ரகுமான் (26), இப்ராகிம் (29) ஆகியோரை கைது செய்தனர்.
News December 30, 2025
மேலூர்: வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு குறித்த அறிவிப்பு

திருச்சி மாவட்டம், மேலூர் பகுதியில் செயல்பட்டு வரும் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் விடுமுறை அளிக்கப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்நிலையில் ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு நாளை (டிச.30) திருச்சி மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் வசதிக்காக நாளை பூங்கா திறந்திருக்கும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 29, 2025
திருச்சி: பிரச்சனைகளை தீர்க்கும் நல்லாண்டவர்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பிரசித்தி பெற்ற நல்லாண்டவர் கோவில் அமைந்துள்ளது. குடும்பத்தில் ஏற்படும் தகராறு, விஷ ஜந்துக்களால் ஏற்படும் தொந்தரவு, மன ரீதியாக ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இங்குள்ள நல்லாண்டவரிடம் முறையிட்டால், அவர் அண்ணனாக இருந்து பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பார் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த தகவலை மறக்கமால் SHARE செய்க.


