News December 15, 2025
இந்தியா சாம்பியன்: CM ஸ்டாலின் வாழ்த்து

சென்னையில் நடந்த SDAT ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடரில், ஹாங்காங்கை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில், மகுடம் சூடிய இந்திய அணிக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய வீரர்களின் இந்த மகத்தான சாதனை தமிழகத்தில் விளையாட்டு அமைப்பின் நம்பிக்கை & சிறப்பை மேலும் வலுப்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார்.
Similar News
News March 4, 2026
ஈரான் பேச்சுவார்த்தைக்கு ரெடி… NO சொல்லும் டிரம்ப்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் போர் 4-வது நாளாக தொடர்கிறது. ஈரானும் பதிலுக்கு வளைகுடா நாடுகளில் தாக்குதலை தொடுத்து வருகிறது. இதனிடையே ஈரானின் விமானப்படை, கடற்படை மற்றும் தலைமை அழிக்கப்பட்டுவிட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இப்போது அவர்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கான நேரம் கடந்துவிட்டதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
News March 4, 2026
சாதிய விஷம் விதைப்பவர்களை கைது செய்க: மாரி செல்வராஜ்

நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியுள்ள<<19286535>> கொலைவெறி தாக்குதல்<<>> பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் சாதிய பெருமிதங்களை விஷமாக விதைத்து வரும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு சிறைபடுத்தவும், வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற TN-க்கான நம்பிக்கையை உருவாக்குமாறும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News March 3, 2026
9 ராஜ்யசபா வேட்பாளர்களை அறிவித்த பாஜக

வரும் 16-ம் தேதி நடைபெறும் ராஜ்யசபா தேர்தலையொட்டி, 9 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. பிஹாரில் இருந்து <<19289207>>தேசிய தலைவர் நிதின் நபின்<<>> மற்றும் சிவேஷ் குமார் ஆகியோரை கட்சி தேர்ந்தெடுத்துள்ளது. அதேபோல், தேராஷ் கோவல்லா, ஜோகன் மோகன் (அசாம்), லட்சுமி வர்மா(சத்தீஸ்கர்), சஞ்சய் பாட்டியா (ஹரியானா), மன்மோகன் சமல், சுஜீத் குமார்(ஒடிசா), ராகுல் சின்ஹா(மேற்கு வங்கம்) ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகின்றனர்.


