News December 14, 2025
திருச்சி மாவட்ட நூலகத்தில் நாளை மாதிரி தேர்வு

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப்-4 கட்டணமில்லா மாதிரித்தேர்வு நாளை காலை 10 முதல் 1:30 மணி வரை நடைபெற உள்ளது. குரூப்-4 தேர்வுக்கான முழு பாடப்பகுதியில் இருந்தும் வினாக்கள் இடம் பெறும். ஓஎம்ஆர் விடைத்தாளில் பதிலளிக்க வேண்டும். இத்தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு, அதிகரிக்க அறிவுரை, வழிமுறைகள் வழங்கப்படும் என மாவட்ட நுாலக அலுவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 24, 2025
திருச்சி: டிபன் கடை தொடங்க ரூ.50,000 கடன்!

பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க ரூ.50,000 கடன் உதவி வழங்குகிறது. மேலும் கடனுக்கான முதல் தவணையை செலுத்தத் தேவையில்லை. இதற்கு விண்ணப்பிக்க அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகவும். மேலும் அறிய திருச்சி மாவட்ட சமுக நல அலுவலரை அணுகலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. (<<18660267>>தொடர்ச்சி<<>>)
News December 24, 2025
அன்னப்பூர்ணா திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதிகள் (2/2)

அன்னப்பூர்ணா திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் ஃபுட் கேட்டரிங் துறையில் சுயதொழில் தொடங்க விரும்புபவராக இருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரரால் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சொந்தமாக நிர்வகிக்கப்பட வேண்டும். உணவுக் கடைகள், கேன்டீன்கள், டிபன் கடைகள் போன்று சிறுதொழிலாக இருக்க வேண்டும். வங்கிகளில் சென்று விண்ணப்பித்த பிறகு, ஆய்வு செய்யப்பட்டு கடன் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க.
News December 24, 2025
திருச்சி – மயிலாடுதுறை மெமு ரயில் நேரம் மாற்றம்

ஜனவரி 1-ம் தேதி முதல் பல்வேறு ரயில்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 1:10 மணிக்கு புறப்பட்டு வந்த, திருச்சி – மயிலாடுதுறை மெமு விரைவு ரயில் வரும் ஜன.1-ம் தேதி முதல் மாலை 4:20 மணிக்கு புறப்பட்டு மாலை 6:50 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


