News December 14, 2025
சங்கிப் படையே வந்தாலும் ஒன்னும் செய்ய முடியாது: CM

நாட்டிலேயே பாஜகவிற்கு எதிராக Ideological fight செய்து கொண்டிருக்கக் கூடிய ஒரே மாநில கட்சி திமுக தான் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் தான் அமித்ஷா போன்றவர்களுக்கு எரிச்சலாக உள்ளது என குறிப்பிட்ட அவர், ஒட்டுமொத்த சங்கி படையையே கூட்டிக்கொண்டு வந்தாலும் உங்களால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது என சவால் விடுத்துள்ளார். பாஜகவால் வெற்றி பெற முடியாதது தமிழகத்தில் மட்டும் தான் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News December 25, 2025
நெல்லை: நிலம் வைத்திருப்பவர்களுக்கு இந்த APP அவசியம்

நெல்லை, வருவாய்த் துறையின் Tamilnilam செயலி மூலம் பொதுமக்கள் செல்போனில் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை எளிதாக அறியலாம். கூகுள் வரைபடத்துடன், தற்போது இருக்கும் இடத்தின் சர்வே எண் திரையில் தோன்றும். திரையை பெரிதாக்கி துல்லிய விவரங்கள் பெறலாம். ‘அ’ பதிவேடு, நில அளவை வரைபடம் உள்ளிட்டவற்றை அறியும் வசதியும் உள்ளது. இந்த <
News December 25, 2025
இங்கிலாந்து கோச்சாக ஆகிறாரா ரவி சாஸ்திரி?

ENG அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும் என Ex வீரர் மாண்டி பனேசர் வலியுறுத்தியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி, ஆஷஸ் என தொடர் தோல்விகளால் தடுமாறும் இங்கிலாந்து, Bazball பாணியை கைவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ரவி சாஸ்திரி தலைமையில் இந்தியா இருமுறை ஆஸி.,யில் டெஸ்ட் தொடர் வென்றதை சுட்டிக்காட்டி, அவருக்கு AUS அணியை வீழ்த்தும் தந்திரம் தெரியும் எனவும் பனேசர் கூறியுள்ளார்.
News December 25, 2025
BREAKING: 10 லட்சம் வாக்காளர்களுக்கு சிக்கல்

SIR படிவத்தை முறையாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் வாக்காளர்களுக்கு அஞ்சல் மூலம் நோட்டீஸ் அனுப்ப ECI முடிவெடுத்துள்ளது. நோட்டீஸ் பெறுபவர்கள், நிரந்தர குடியிருப்பு உள்ளிட்ட 13 சான்றிதழ்களை ஆவணமாக சமர்பிக்கலாம். இதற்கு ஏதுவாக ஜன.25 வரை கட்டணமின்றி சான்றிதழ்கள் வழங்க வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது. உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் தகுதியான வாக்காளர் பெயர் மீண்டும் லிஸ்ட்டில் சேர்க்கப்படும் என கூறப்படுகிறது.


