News April 29, 2024

ராணிப்பேட்டை: கோயிலுக்கு சென்ற சிறுவன் உயிரிழப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா, டி.சி.குப்பத்தை சேர்ந்தவர் சத்யா. முன்னாள் ராணுவ வீரரான இவர் குடும்பத்துடன் நத்தம் மலைப்பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோயிலுக்கு நேற்று(ஏப்.28) சென்றுள்ளார். அப்போது சத்யாவின் மூத்த மகன் ஹர்ஷன் (14) திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை டோலி கட்டி மருத்துவமனை கொண்டு வந்த நிலையில், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மூச்சு திணறலால் இறந்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

Similar News

News November 6, 2025

ராணிப்பேட்டையில் நாளையே கடைசி!

image

ராணிப்பேட்டை மக்களே, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பயிற்சிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு +2, ITI, டிகிரி போதும். +2 படித்தவர்களுக்கு ரூ.9,600, ITI-ரூ.11,040, டிகிரி-ரூ.12,300, டிப்ளமோ-ரூ.10,900 என உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு கல்வித் தகுதியின் மதிப்பெண் அடைப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. <>இங்கு கிளிக் <<>>செய்து நாளைக்குள் விண்ணப்பிக்கவும். ஷேர்!

News November 6, 2025

அரக்கோணம்: GH-ல் திருட்டு!

image

அரக்கோணம் அரசு பொது மருத்துவமனையில் உள் நோயாளியாக இருப்பவர்களிடம் இரவு நேரங்களில் செல்போன் திருடு போனது .இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தொடர்ந்து புகார் சென்றது. இந்நிலையில் நேற்று இரவு நோயாளி ஒருவரிடம் செல்போன் திருடியவர் கையும் களவுமாக பிடிபட்டார். இன்று நவம்பர் 5ம் தேதி டவுன் போலீசார் விசாரித்து வழக்குப்பதிந்து ஆத்தூரை சேர்ந்த மாரியப்பன் (45) என்பவரை கைது செய்தனர்.

News November 6, 2025

அரக்கோணத்தில் ரயில் மோதில் பலி

image

ராணிப்பேட்டை, அரக்கோணம் அடுத்த செஞ்சி பானம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றவர் ரயில் மோதி இறந்தார். இது குறித்து நவ.5 ம் தேதி அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் அங்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இறந்தவர் யார் என விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!