News December 14, 2025
பரமக்குடியில் புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்த எம்எல்ஏ

பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து காந்திநகர் இளையான்குடி வழியாக சேத்தூர் செல்லும் புதிய பேருந்து சேவையை இன்று பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, பரமக்குடி கிளை மேலாளர் சிவகார்த்திகேயன், ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன், ஜெயக்குமார்,பொதுக்குழு உறுப்பினர் அருளானந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 19, 2025
BREAKING ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,17, 364 வாக்காளர்கள் நீக்கம்

ராமநாதபுரம் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங்காலோன் இன்று வெளியிட்டார். இதன் படி பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் என 4 சட்டமன்றத் தொகுதிகளில் 10,91,326 வாக்காளர்கள் உள்ளனர். 4 சட்டமன்ற தொகுதிகளில் 1,17,364 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
News December 19, 2025
ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு

மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக்., பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் டிச.24 ( புதன் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
News December 19, 2025
ராம்நாடு: இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY..!

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது ராமநாதபுரம் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். SHARE பண்ணுங்க


