News December 14, 2025
பிரபல நடிகர் காலமானார்.. பரபரப்பு தகவல்

பிரபல மலையாள நடிகர் <<18553428>>அகில் விஸ்வநாத்<<>> (30), நேற்று மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். இந்நிலையில், இது தற்கொலை என தகவல் வெளியாகியுள்ளது. அவரது தாய் கீதா வேலைக்கு சென்றுவிட்டு திரும்புகையில், வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தாராம். இதனால் அதிர்ச்சியில் தாயார் உறைய, பின்னர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளாராம். தற்கொலை எதற்கும் தீர்வல்ல!
Similar News
News December 22, 2025
தேனி: தந்தை கண்டித்ததால் மகள் தற்கொலை!

ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித். இவரது மகள் சுஷ்மிதா (21) தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் அடிக்கடி செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். இதனை அவரது தந்தை ரஞ்சித் கண்டித்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் நேற்று (டிச.21) சுஷ்மிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News December 22, 2025
ஸ்டாலினுக்கும், EPS-க்கும் தான் போட்டி: ஆர்.பி.உதயகுமார்

தேர்தலுக்கு 4 முனைப்போட்டி நிலவுவதாக சொல்கின்றனர் ஆனால் ஸ்டாலினுக்கும் EPS-க்கும் மட்டும்தான் போட்டி என ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். விளம்பரங்கள் மூலம் பொய் மூட்டைகளை திமுக அவிழ்த்துவிடுவதாக கூறிய அவர், உண்மை என்ன என்பது TN மக்களுக்கு தெளிவாக தெரியும் என கூறியுள்ளார். மேலும் பணமும் அதிகார பலமும் இருப்பதால் தேர்தலில் ஜெயிக்கலாம் என CM நினைத்தால் அது பகல் கனவாகிவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
News December 22, 2025
பிரபல நடிகர் தற்கொலை

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ரன்சோன் (46) தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் அண்மை காலமாகவே, தனிப்பட்ட வாழ்க்கை & மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. உலகளவில் வெற்றி பெற்ற ‘IT: சாப்டர் 2’ படத்தில் ஜேம்ஸ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரபலமான ‘The wire’ வெப் சீரிஸில் ஜிக்கி சோபோட்கா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமடைந்திருந்தார்.#RIP


