News December 14, 2025
திண்டுக்கல் காவல்துறை முக்கிய அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை, சமூக தளம், குறுஞ்செய்தி, வேலைவாய்ப்பு லிங்குகள், டேட்டா என்ட்ரி போன்ற அழைப்புகள் மற்றும் செய்திகளை நம்பி ஏமாறாதீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இவை மோசடி முயற்சிகள் ஆகும். பணம் இழப்பதைத் தவிர்க்க, சந்தேகமான அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் மற்றும் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறது.
Similar News
News December 29, 2025
திண்டுக்கல்: 10th பாஸ் போஸ்ட் ஆபீஸ் வேலை!

திண்டுக்கல்: இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். <
News December 29, 2025
குஜிலியம்பாறை: கைவரிசை காட்டிய நண்பர்கள்!

திண்டுக்கல் குஜிலியம்பாறையைச் சேர்ந்த கருப்பசாமி, திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றபோது அவரது கார் திருடப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், கருப்பசாமியின் வீட்டின் அருகே வசிக்கும் செந்தில்குமார் மற்றும் அவரது நண்பர் இருளப்பசாமி ஆகியோரே காரைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், காரை மீட்டனர்.
News December 29, 2025
திண்டுக்கல்: இலவச கேஸ் சிலிண்டர் விண்ணப்பிப்பது எப்படி?

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற <
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555,1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க


