News December 14, 2025

கள்ளக்குறிச்சி: ரூ.1.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசின் டிஆர்டிஓ-வில் 17 வகை பிரிவுகளின் கீழ் 764 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ, BE, B.Sc படித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,900-ரூ.1,12,400 வரை வழங்கப்படும். 18-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. விருப்பமுள்ளவர்கள் ஜன.1ஆம் தேதிக்குள்<> இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 16, 2025

கள்ளக்குறிச்சி: டிகிரி முடித்தால் ரூ.35,400 சம்பளம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? மத்திய அரசின் டாடா நினைவு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க, டிச.24ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 16, 2025

கள்ளக்குறிச்சி: குட்கா விற்ற பெண் கைது!

image

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜித்குமார் தலைமையிலான போலீசார் பாவளம் கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த சாந்தி (வயது 58) என்பவரது மளிகை கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது கடையில் போலீசார் சோதனை செய்ததில் ரூ.2,700 மதிப்பி–லான புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவரை கைது செய்தனர்.

News December 16, 2025

கள்ளக்குறிச்சி: மன உளைச்சலில் பெண் எடுத்த விபரீத முடிவு

image

தியாகதுருக்கம் அருகே பிரிதிவிமங்கலத்தைச் சேர்ந்த அர்ஜூனனின் மனைவி பிரியா. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்ததாகவும், பிரியா உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால், பிரியா படுக்கை அறையில் ஊஞ்சல் கயிற்றில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த தியாகதுருகம் போலீசார், பிரியாவின் உடலைக் கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார்.

error: Content is protected !!