News December 14, 2025
பொங்கல் பரிசுத் தொகை.. அமைச்சர் HAPPY NEWS

2026 தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரொக்கப் பரிசை திமுக அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பொங்கல் பரிசில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹1,000 வழங்கப்படுமா என அமைச்சர் பெரிய கருப்பனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ₹1,000 வழங்கும் அதிகாரம் என்னிடம் இல்லை என்ற அவர், CM உத்தரவின் பேரிலேயே செயல்படுவோம் என்றார். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம்.
Similar News
News December 17, 2025
3 மாதங்களில் இந்தியாவுக்கு வந்த 3-வது தாலிபன் அமைச்சர்

ஆப்கானிஸ்தானின் சுகாதாரத்துறை அமைச்சர் நூர் ஜலால் அரசுமுறை பயணமாக நேற்று டெல்லி வந்தார். இந்தியா – ஆப்கன் இடையே சுகாதாரத் துறையில் உறவை வலுப்படுத்தும் நோக்கத்தில் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். மூன்று மாதங்களில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட மூன்றாவது தலிபான் அமைச்சர் இவர் என்பது கவனிக்கத்தக்கது. பாகிஸ்தானுடன் மோதல் போக்கை கையாளும் ஆப்கான் இந்தியாவுடனான தனது உறவை வலிப்படுத்தி வருகிறது.
News December 17, 2025
கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 உணவுகள்

இந்தியாவில் 2025-ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட உணவுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் நாம் எதிர்பார்க்காத பல உணவுகள் இடம்பெற்றுள்ளன. தென்னிந்திய உணவுகளான இட்லி, கொழுக்கட்டை, களி ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. மேலே, டாப் 10-ல் இடம்பிடித்த உணவுகளை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் உங்களுக்கு பிடித்தது எது? SHARE.
News December 17, 2025
CINEMA 360°: மீண்டும் AGS-யுடன் இணைந்த பிரதீப் ரங்கநாதன்

*மறைந்த தமிழக விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை கதையில் மாதவன் நடிக்கும் ‘ஜி.டி.என்.’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. *’லவ் டுடே’, ‘டியூட்’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளார். *மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘விருஷபா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. *மம்முட்டியின் ‘களம்காவல்’ படத்தின் வசூல் 75 கோடியை தாண்டியுள்ளது.


