News December 14, 2025

பிரபல நடிகை மரணம்.. அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

image

<<18559412>>நடிகை ராஜேஸ்வரியின் மரணம்<<>> குறித்து அடுத்தடுத்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், அவரது தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சைதாப்பேட்டை போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. கணவன் சதீஷ் கொடுமைப்படுத்தியதால் ராஜேஸ்வரி சோக முடிவை எடுத்தாரா (அ) வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. டிச.16-ல் ராஜேஸ்வரி மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 23, 2025

திருவள்ளூர்: அண்ணியை கொலை செய்த வாலிபர் கைது!

image

இருளஞ்சேரி கிராமம், கலைஞர் நகரைச் சேர்ந்த இசைமேகன் என்பவர், நேற்று முன் தினம் திருமணமாகி 3 மாதத்திலேயே கர்ப்பமான தனது மனைவியை கிண்டல் செய்ததற்காக தனது அண்ணியை கத்தியால் சராமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடினார். இதில், அவரது அண்ணி சாந்தி உயிரிழந்தார். இந்நிலையில், தலைமறைவான இசைமேகனை நேற்று(டிச.22) மப்பேடு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News December 23, 2025

ரஞ்சித், மாரியின் வலிகளை ஏற்க வேண்டும்: சரத்குமார்

image

பா.ரஞ்சித், மாரி செல்வராஜின் படங்கள் சாதியை மையப்படுத்தியவை என்ற விமர்சனங்கள் பற்றி சரத்குமார் பேசியுள்ளார். ஏன் இதை காண்பிக்கிறீர்கள் என்று நாம் கேட்பது அபத்தமானது, அது அவர்கள் அனுபவித்த வலி, அதை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என தெரிவித்தார். மேலும், அடிமைப்பட்டு இருந்த அவர்களின் வலி இன்னும் அவர்களின் நினைவுகளில் இருந்து அகலவில்லை. எனவே படங்களை படமாக பார்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

News December 23, 2025

Voter லிஸ்ட்டில் பெயர் சேர்க்க 92,000 பேர் விண்ணப்பம்

image

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், <<18628448>>பெயர்<<>> சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. இந்நிலையில், பெயர் சேர்க்க கோரி 3 நாள்களில் 92,626 படிவங்கள் வந்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். அதேநேரம், 1,007 படிவங்கள் பெயர் நீக்கத்திற்காக வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நீங்க <<18636185>>செக்<<>> பண்ணிட்டீங்களா?

error: Content is protected !!