News December 14, 2025

தாய்லாந்து கடற்கரை பகுதிகளில் ஊரடங்கு!

image

கம்போடியாவின் <<18550033>>கோ கோங்<<>> மாகாணத்தின் மீது தாய்லாந்து தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இருநாடுகள் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக தாய்லாந்தின் தென்கிழக்கு மாகாணமான டிராட்டில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சுற்றுலா தீவுகள் தவிர்த்து, 5 மாவட்டங்களில் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக கிழக்கு சாகியோ மாகாணத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது.

Similar News

News December 25, 2025

கோர விபத்தில் 20 பேர் இறப்பு.. PM மோடி இரங்கல்

image

<<18664814>>கர்நாடக பஸ் விபத்தில்<<>> 20 பேர் உயிரிழந்த சம்பவம் தன்னை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார். தனது X பதிவில், இரங்கல் கூறியுள்ள அவர் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சமும், காயமடைந்த நபர்களுக்கு ₹50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்ற போது இந்த சோகம் நிகழ்ந்தது மிகவும் வேதனைக்குரியது.

News December 25, 2025

தவெக + காங்., கூட்டணி: முடிவை தெரிவித்தார்

image

சமீபகாலமாக காங்கிரஸ் உடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இதுகுறித்த உண்மையை தற்போது செங்கோட்டையன் போட்டு உடைத்திருக்கிறார். காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் தவெகவுக்கு இல்லை என ஓபனாக அவர் தெரிவித்துள்ளார். இதனால், திமுக காங்கிரஸ் கூட்டணியில் உருவான புயல் சற்று வலுவிழந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News December 25, 2025

ஒரே வீட்டில் 44 பேர் எரித்து கொலை.. ஓயாத ஓலம்

image

1968-ல் விவசாய கூலியாக அரைப்படி நெல் அதிகம் கேட்டதற்காக, பண்ணையாரின் அடியாட்களால் ஒரு கிராமமே தாக்குதலுக்கு உள்ளானது. இதில் பயந்து ஓடிய பெண்கள், குழந்தைகள் தப்பித்துக்கொள்ள ராமையா என்பவரது வீட்டிற்குள் சென்றனர். ஆனால், அந்த வீடு தாழிடப்பட்டு தீ வைத்ததில் 44 பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர். இந்த ஆறாத வடுவான கீழ்வெண்மணி படுகொலை நடந்த தினமான இன்றும், அவர்களது அலறல்கள் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது.

error: Content is protected !!