News December 14, 2025

சிவகங்கையில் புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

சிவகங்கை மக்களே, ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலத்தில் 5 வருடங்களுக்கு மேல் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருக்க வேண்டும். உரிய ஆவணங்களோடு கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பத்தை அளித்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News December 16, 2025

சிவகங்கையில் 12,000 காலியிடங்கள்! கலெக்டர் அறிவிப்பு

image

சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வரும் டிச.20 அன்று மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 90 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 12 ஆயிரம் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10, 12th, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார். தொடர்புக்கு -8056501556. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

News December 16, 2025

சிவகங்கை: தொழிலாளி மர்ம மரணம்

image

சிவகங்கை மாவட்டம். பெரியகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன் (25). சொந்த ஊர் வைகை மீனாட்சிபுரம் விறகு வெட்டும் தொழில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவில் சென்றவர் காணவில்லை என நேற்று பகல் முழுவதும் தேடி உள்ளனர். மாலை பொழுது பெரியகோட்டை உப்பு ஆறு அருகே கருவேல மரங்கள் செல்லும் பகுதியில் தலையில் வெட்டு காயத்துடன் இறந்து கிடந்து உள்ளார். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 16, 2025

சிவகங்கை: செயின் பறிப்பு வழக்கு; இருவருக்கு சிறை

image

சிவகங்கை, காரைக்குடி பாப்பாஊரணியில் இந்திரா என்பவரிடம் தங்க நகையை பறித்தது தொடர்பாக வாணியங்குடியை சேர்ந்த சங்கர் @ குட்டைசங்கர் மற்றும் வைரம்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் இருவருக்கும் 3 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.5000 அபராதமும் விதித்தும் தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!