News December 14, 2025

புதுச்சேரி: ஆடு வளர்ப்பு பயிற்சி அறிவிப்பு

image

புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் மாதூர் கிராமத்தில், இயங்கி வரும் காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில், எதிர்வரும் டிசம்பர் 17 ஆம் தேதி (புதன்கிழமை) அன்று அறிவியல் முறையில் ஆடு வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் பங்குபெற 7904184739 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News December 23, 2025

புதுவை: ஆளுநர் பெயரில் ஹரியானாவை சேர்ந்தவர் மோசடி

image

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பெயரில் முகநுால் கணக்கு துவங்கி, பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட முயற்சி செய்த இணையவழி மோசடி கும்பல் மீது, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர் பேசிய தொலைபேசி எண்ணின் முகவரி ஹரியானா என தெரிய வந்துள்ளது.

News December 23, 2025

புதுச்சேரி: அரசு காலண்டர் வெளியீட்டு விழா

image

புதுச்சேரி அரசு 2026 ஆண்டு காலண்டர் வெளியீட்டு விழா, இன்று சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் ரங்கசாமி காலண்டரை வெளியிட்டார். இதில் சட்டப்பேரவை தலைவர் செல்வம், அச்சுத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், எம்.எல்.ஏ லட்சுமிகாந்தன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News December 23, 2025

புதுச்சேரி: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!