News December 14, 2025
திருப்பூரில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

திருப்பூர் ரயில் நிலையம் அருகே வடக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த கன்ஷ்யாம் குமார் என்ற நபரை, போலீசார் சோதனை செய்தனர். அவரிடம் கஞ்சா சாக்லேட் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து கஞ்சா சாக்லேட் 1. 5 கிலோ மற்றும் 500 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.
Similar News
News March 3, 2026
திருப்பூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே கிளிக் செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.
News March 3, 2026
பல்லடம் தொகுதியில் இவரா?

பல்லடம் சட்டமன்றத் தொகுதியில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, பல்லடம் நகரச் செயலாளர் ராஜேந்திரகுமார் நேற்று விருப்ப மனு தாக்கல் செய்தார். சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது, பல்லடம் திமுக நிர்வாகிகள், இளைஞர் அணியினர் மற்றும் கட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
News March 3, 2026
அவிநாசி அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

கோவை ரத்தனபுரி, தாசப்பன் வீதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (41). தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவினாசி அருகே கொச்சி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, அவருக்கு பின்னால் வந்த லாரி, ஸ்டீபன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்த ஸ்டீபன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக
உயிரிழந்தார்.


