News December 14, 2025

புதுச்சேரி: கடலோர காவல் பிரிவு போலீசார் எச்சரிக்கை

image

புதுச்சேரி கடலோர காவல் பிரிவு இன்ஸ்பெக்டர் தியாகராஜன் விடுத்துள்ள அறிவிப்பில், ”உப்பளம் மைதானம், பழைய துறைமுகம், புதிய துறைமுகம், கடற்கரை பகுதிகள் உட்பட, கடலோர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், மது அருந்துதல் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Similar News

News March 2, 2026

புதுச்சேரி: FREE-அ டாக்டர பாக்கனுமா? Click Here

image

புதுச்சேரி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <>இங்கு கிளிக்<<>> செய்து Install பண்ணுங்க. இதில் மருத்துவர்களிடம் வீடியோ காலில் காய்ச்சல், சளி, தலைவலி, கண்பார்வை, சுகர், பிரசர், கர்ப்பகால ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். முடிவில் டிஜிட்டல் மருத்து சீட் வழங்கப்படும். இதனால் உங்களுக்கு தேவையில்லாத செலவு குறையும். இந்த அருமையான தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 2, 2026

புதுச்சேரியில் +2 தேர்வெழுதிய 7,585 மாணவர்கள்

image

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, இன்று துவங்கி வரும் 26ம் தேதிவரை நடக்கிறது. இத்தேர்வை, புதுச்சேரியில் உள்ள 84 தனியார் பள்ளிகளை சேர்ந்த 6,979 மாணவர்கள், காரைக்காலில் உள்ள 16 தனியார் பள்ளிகளை சேர்ந்த 606 மாணவ மாணவிகள் என மொத்தம் 7,585 பேர் எழுதினர்.

News March 2, 2026

புதுச்சேரி: காங்கிரஸ் கட்சியும் தேர்தலை புறக்கணிக்கும்

image

புதுச்சேரி சட்டப்பேரவை அருகே உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முதலமைச்சர் ரங்கசாமி மாநில அந்தஸ்துக்காக தேர்தலை புறக்கணிப்பதாக வெளிப்படையாக கூறினால், காங்கிரஸ் கட்சியின் தேர்தலை புறக்கணிக்கும் என்று வைத்திலிங்கம் தெரிவித்தார்.

error: Content is protected !!