News December 14, 2025
கிருஷ்ணகிரி: மின்கம்பத்தில் மோதி வாலிபர் பலி!

கிருஷ்ணகிரியில் வினித், கோபி & ராஜ்குமார் ஆகிய மூவரும் காவேரிப்பட்டணம் அருகே கால்வேஹள்ளி ஊரில் தன் நண்பரின் பிறந்தநாளை கொண்டாடி விட்டு இன்று (டிச.14) அதிகாலை வீடு திருப்பினர். அப்போது கால்வேஹள்ளி அருகே பைக்கில் அதிவேகமாக சென்றதால், நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி வினித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின், மற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Similar News
News March 3, 2026
கிருஷ்ணகிரி: சிலிண்டர் மானியம் வருதா? போனில் பார்க்கலாம்

கூகுளில் <
News March 3, 2026
ஓசூர் திமுகவில் பரபரப்பு – MLA, மேயர் விருப்பமனு!

ஒசூா் தொகுதியில் போட்டியிட சென்னை அண்ணா அறிவாலயத்தில் மேயர் எஸ்.ஏ.சத்யா நேற்று (மார்ச்.1) விருப்ப மனு அளித்தார். இதில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொருளாளா் சுகுமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோராமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக தற்போதைய எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் விருப்ப மனு அளித்த நிலையில் மேயர் சத்யாவும் மனு அளித்திருப்பது ஓசூர் பகுதி திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
News March 3, 2026
ஓசூரில் இன்று உள்ளூர் விடுமுறை!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் கோயில் விழாவை முன்னிட்டு இன்று (மார்ச் 3) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி தாலுகாவில் மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 3 உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்ய மார்ச் 14-ல் முழு வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. “மறக்காம ஷேர் பண்ணுங்க”


