News December 14, 2025

தருமபுரி: பிறந்தநாள் அன்று உயிரிழந்த சோகம்!

image

தருமபுரி, சந்தப்பேட்டை சேர்ந்த வினித் ஓசூர் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (டிச.13) அதிகாலை நண்பர்களின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று விட்டு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது சாலையோரம் மின்கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு, காவேரிப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News December 31, 2025

தருமபுரி மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

image

தருமபுரி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <>கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

News December 31, 2025

தருமபுரி மக்களே.. டூவீலர், கார் உள்ளதா?

image

ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த<> லிங்கில்<<>> மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News December 31, 2025

முதலிடம் பிடித்த மாணவனை பாராட்டிய ஆட்சியர்

image

2025-2026-ஆம் ஆண்டிற்கான கலைத் திருவிழா (களிமண் சிற்ப வேலைபாடு) போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்த அதிகாரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவன் சத்தீஸ்வரனை மாவட்ட ஆட்சியர் சதீஸ் நேற்று பாராட்டினார். அப்போது தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், அதிகாரப்பட்டி பள்ளியின் தலைமையாசிரியர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!