News December 14, 2025
இந்த பரிகாரத்தை திமுக செய்யணும்: அன்புமணி

கல்வி கற்க வேண்டிய வயதில் மதுவால் மாணவர்கள் சீரழிவது, வலியை தருவதாக அன்புமணி தெரிவித்துள்ளார். <<18550757>>பாளையங்கோட்டை சம்பவத்தை<<>> சுட்டிக்காட்டியுள்ள அவர், மாணவிகளுக்கு மது விற்பனை செய்த, வாங்கிக் கொடுத்தவர்கள் மீது எடுக்கப்படவுள்ள நடவடிக்கை பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். இளம் தலைமுறையை மதுவுக்கு அடிமையாக்கிய பாவத்திற்காக, மதுக்கடைகளை முற்றிலும் மூடி DMK பரிகாரம் செய்ய வேண்டும் என X-ல் அவர் பதிவிட்டுள்ளார்.
Similar News
News December 20, 2025
ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா?

கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து மத்திய பட்ஜெட் பிப்.1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அனால் 2026-ல் ஞாயிற்றுக்கிழமை(பிப்.1) வருவதால் அன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முக்கிய நிகழ்வுகளுக்காக விடுமுறை தினங்களிலும் நாடாளுமன்றம் கூட வாய்ப்புள்ளது. உதராணமாக 2020-ல், கொரோனா தொற்று காலத்தின் போது அவசர தேவைகளுக்காக ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றம் கூடியது.
News December 20, 2025
ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள்

*உண்மையான நம்பிக்கை ஒருவனுக்கு இருக்குமாயின், அந்த நம்பிக்கை மலையைக் கூட அசைத்துவிடும். *சொல்லும் செயலும் பொருந்தி வாழும் மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழ்கின்ற மனிதன். *ஒன்றை அடையவதற்கு தேவை நல்ல குணம், ஒழுக்கம், ஒருமித்த செயல், எதற்கும் தயாராக இருத்தல். *தோல்வி என்பது அடுத்த காரியத்தை கவனமாக செய் என்பதற்கான எச்சரிக்கை. *மிரட்டிப் பணியவைக்கும் எந்த செயலும் வெறுக்கத்தக்கதே.
News December 20, 2025
கேப்டன் பதவியை இழக்கிறாரா சூர்யகுமார் யாதவ்?

டி20 போட்டிகளில் இந்தியா அசத்தி வந்தாலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து சொதப்பி வருகிறார். கேப்டன் என்பதால் மட்டுமே சூர்யா அணியில் விளையாடுகிறார். துணை கேப்டன் சுப்மன் கில்லின் பார்மும் சிறப்பாக இல்லாததால் WC-ல் SKY தலைமையில் இந்தியா அணி விளையாடும். ஆனால் WC முடிந்த பின் அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவார் என தகவல் வெளியாகியுள்ளது.


