News December 14, 2025
சென்னையில் குடுகுடுப்பைக்காரர் போல் வந்து திருட்டு

சென்னை கொட்டிவாக்கத்தில் குடுகுடுப்பைக்காரர் போல வேடமணிந்து வந்து, வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் செய்வினை இருப்பதாக கூறி திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவன், குழந்தைகள் இறந்துவிடுவார்கள் என்றும், பூஜை செய்வதாக கூறியும் பெண்ணின் 5 சவரன் நகை, ரூ.10,000 திருடியுள்ளார். சிசிடிவி காட்சிகளை வைத்து போலி குடுகுடுப்பைக்காரர் பாலமுரளி என்பவர் கைது செய்யப்பட்டார்.
Similar News
News December 27, 2025
சென்னை:போதையில் காதல் மனைவி அடித்துக்கொலை

சென்னை அசோக் நகரைச் சேர்ந்த மெக்கானிக் பிரவீன்குமார், மதுபோதையில் தனது மனைவி வித்யாபாரதியுடன் தகராறில் ஈடுபட்டு அவரைத் அடித்து உதைத்துள்ளார். இதில் கட்டிலில் விழுந்து பலத்த காயமடைந்த வித்யாபாரதி, மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து அசோக் நகர் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து பிரவீன்குமாரைக் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News December 27, 2025
சென்னை: இன்று SIR சிறப்பு முகாம் நடைபெறுகிறது!

சென்னையில் S.I.R பணிகளை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்கு சாவடிகளிலும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் மேற்கொள்ளவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 27, 2025
சென்னை: FACE BOOKல் ஆசை வார்த்தை கூறி ரூ.27,000 விபூதி!

சென்னையில் முகநூலில் பெண்ணுடன் பழக வைப்பதாக கூறி அமீத் அலி என்பவரிடம் வடமாநில இளைஞர் கூகுள்பே மூலமாக ரூ.27000 பெற்று ஏமாற்றி உள்ளார். அவரை தொடர்பு கொண்டபோது அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அமீத் அலி சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் போலிசார் திருடனை தேடி வருகின்றனர்.


