News December 14, 2025

குமரி: Gpay, Phonepe, paytm பயன்படுத்துகிறீர்களா?

image

குமரி மக்களே Gpay, Phonepe, paytm தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்

Similar News

News December 20, 2025

குமரி: தீக்குளித்து பரிதாப பலி

image

அருமநல்லூரை சேர்த்தவர் பச்சையம்மாள் (75). இவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால், சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று வீட்டிலிருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டார். இதில், படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பூதப்பாண்டி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News December 20, 2025

குமரி: 625 லிட்டர் மண்ணெண்ணை பறிமுதல்

image

சாமியார் மடம் அருகே கல்லு விளையில் உள்ள ஒரு தோட்டத்தில் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் திருவட்டாறு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தலைமையில் போலீசார் தோட்டத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 33 கேன்களில் 625 லிட்டர் மண்ணெண்ணை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறையினரிடம் ஒப்படைத்தனர்.

News December 20, 2025

நடிகர் எம்எஸ் பாஸ்கருக்கு தாழக்குடியில் பாராட்டு

image

தமிழ் திரைப்பட நடிகர் எம்எஸ் பாஸ்கர் இன்று குமரி மாவட்டத்திற்கு வந்திருந்தார். அவருக்கு தாழக்குடி ஊர் சார்பாக 2023-ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பார்க்கிங்கில் நடித்ததற்காக, 71-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றதற்காக தாழக்குடி ஊர் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டு பாராட்டு தெரிவித்தனர்.

error: Content is protected !!